Highlights
- பட்டதாரி அல்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி உதவி ரூ. 25,000/-.
- பட்டதாரி ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி உதவி ரூ. 50,000/-.
- திருமாங்கல்யத்திற்கு இரு பிரிவினருக்கும் 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
Customer Care
- தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உதவி எண் :- 044-24351891.
திட்டம் பற்றிய சிறப்பு பார்வை |
|
---|---|
திட்டத்தின் பெயர் | அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம். |
பயன்கள் |
|
பயனாளி | ஆதரவற்ற பெண் பிள்ளைகள். |
வயது வரம்பு |
|
குறைத் தீர்க்கும் பிரிவு | சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு. |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். |
திட்ட அறிமுகம்
- ஆதரவற்ற பிள்ளைகள் தமிழக அரசு "அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் ஆதரவற்ற பென் பிள்ளைகள் அவர்களின் திருமண நேரதில் நிதி உதவி பெருவார்கள்.
- இது தமிழ்நாடு திருமண உதவித் திட்டத்தின் துணைப் பகுதியாகும்.
- இத்திட்டத்தின் மூலம் ஆதரவற்ற பிள்ளைகள் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இத்திட்டத்தின் குறைத் தீர்க்கும் பிரிவு, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு.
- இத்திட்டத்தின் கீழ் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு நிதி உதவி ரூ. 25,000/- மற்றும் ரூ. 50,000/- வழங்கப்படும்.
- இந்த திட்டம் பின்வரும் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது :-
- பட்டதாரிகள்.
- பட்டதாரிகள் அல்லாதவர்கள்.
- பட்டதாரிகள் ரூ. 25,000/- உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- பட்டதாரி அல்லாதவர்கள் ரூ. 50,000/- உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- இது தவிர பட்டதாரி மற்றும் பட்டதாரி அல்லாத இருவருக்கும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் அருகிலுள்ள பொது சேவை மையம் (CSC)சென்று அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டத்திற்க்காக விண்ணப்பிக்களாம்.
திட்டத்தின் பயன்கள்
- அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு பின்வரும் பயன்கள் கிடைக்கப்படும்:
பயனாளி பயன்கள் பட்டதாரி அல்லாதவர்களுக்கு - நிதி உதவித்தொகை ரூ. 25,000/- :-
- ரூ. 15,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
- ரூ. 10,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
- 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு உடையவர்கள் - நிதி உதவித்தொகை ரூ. 50,000/- :-
- ரூ. 30,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
- ரூ. 20,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
- 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
- நிதி உதவித்தொகை ரூ. 25,000/- :-
தகுதி நெறி முறைகள்
- கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தியடைபவர்கள் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் :-
- தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- மணமகளின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
- மணமகனின் வயது 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
- வருமான வரம்பு இல்லை.
- குறைந்தபட்ச கல்வித் தகுதி தேவையில்லை.
தேவையான ஆவணங்கள்
- ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டத்தை விண்ணப்பிக்கும் பொழுது தேவைப்படும் ஆவணங்கள் பின்வருமாறு :-
- மணமகள் மற்றும் மணமகனின் வயதுச் சான்று.
- சாதிச் சான்றிதழ்.
- ஆதரவற்ற சிறுமியர் சான்றிதழ்.
- திருமண அழைப்பிதழ்.
- மணமகள் கல்விச் சான்றிதழ்.
- குடியிருப்பு சான்று.
- திருமண புகைப்படம்.
- குடும்ப அட்டை.
- ஆதார் அட்டை.
விண்ணப்பிக்கும் முறை
- பயனாளிகள் அருகிலுள்ள பொது சேவை மையத்தின் மூலம், தமிழ்நாடு அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிக்கலாம்.
- பயனாளியின் சார்பாக அங்குள்ள முகவர் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணத்தை பதிவேற்றம் செய்வார்.
- அதன் பிறகு பயனாளியின் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்கள் மாவட்ட சமூக நல அலுவலரால் ஆய்வு செய்யப்படும்.
- ஏற்க்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தை அதற்க்குறிய பயனாளிக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
- ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, நிதி உதவித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
திட்டத்தின் அம்சங்கள்
- அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற, திருமண தேதிக்கு 40 நாட்களுக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், திருமண தேதிக்கு ஒரு நாள் முன்னதாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
- மணமகள் மற்றும் மணமகனின் வயது 18 மற்றும் 20 வயதாக இருக்க வேண்டும்.
- இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் பயன்பெற இரண்டு வகைகள் உள்ளன :-
- பட்டதாரி அல்லாத ஆதரவற்றவர்கள் ரூ. 25,000/- உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள்.
- பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு பெற்ற ஆதரவற்றவர்கள் ரூ. 50,000/- உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள்.
- கல்வித் தகுதியில் பின்வரும் வகைகள் உள்ளன :-
- உதவித்தொகை ரூ. 25,000/- பெற, கல்வித் தகுதி தேவையில்லை.
- உதவித்தொகை ரூ. 50,000/- பெற, விண்ணப்பதாரர் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு பெற்றவராக இருக்க வேண்டும்.
முக்கியமான இணைப்புகள்
- அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம் விண்ணப்ப நிலை.
- சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு.
- மாவட்ட சமூக நல அலுவலர்கள் தமிழ்நாடு தொடர்பு விவரங்கள்.
- அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம் வழிகாட்டுதல்கள்.
தொடர்பு விபரங்கள்
- தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உதவி எண் :- 044-24351891.
- சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு,
எண். 1 பனகல் மாளிகை கட்டிடம், 2வது தளம்,
(கலைஞர் ஆர்ச் அருகில்), ஜீனிஸ் சாலை,
சைதாப்பேட்டை, சென்னை - 600015.
Also see
Matching schemes for sector: Marriage
Sno | CM | Scheme | Govt |
---|---|---|---|
1 | தமிழ்நாடு திருமண உதவித் திட்டம் | தமிழ்நாடு | |
2 | டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் | தமிழ்நாடு | |
3 | ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம் | தமிழ்நாடு | |
4 | டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் | தமிழ்நாடு | |
5 | மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் | தமிழ்நாடு |
Subscribe to Our Scheme
×
Stay updated with the latest information about அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்
Comments
Tamil
Scheme marriage
புதிய கருத்தை சேர்