
Highlights
- நிதி உதவி ரூ. 25,000/- மற்றும் ரூ. 50,000/-.
- 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
Customer Care
- தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உதவி எண் :- 044-24351891.
திட்டம் பற்றிய சிறப்பு பார்வை |
|
---|---|
திட்டத்தின் பெயர் | டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம். |
பயன்கள் |
|
பயனாளி | கலப்பு திருமண தம்பதி |
குறைத் தீர்க்கும் பிரிவு | சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு. |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். |
திட்ட அறிமுகம்
- "டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்" தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட மகளிர் நலத் திட்டங்களில் ஒன்றாகும்.
- சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையானது, இத்திட்டத்தின் குறைத் தீர்க்கும் பிரிவாகும்
- இந்தத் திட்டத்தைத் தொடங்குவதன் முக்கிய நோக்கம், சாதிகளுக்கிடையேயான கலப்பு திருமணத்தை ஊக்குவிப்பதன் மூலம் சாதி மற்றும் சமூக பாகுபாட்டை ஒழிப்பதாகும்.
- இந்தத் திட்டத்தின் கீழ், சாதிகளுக்கிடையேயான கலப்பு திருமணத் தம்பதிகளுக்கு திருமணத்திற்கான நிதி உதவி வழங்கப்படும்.
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டமானது, தமிழ்நாடு திருமண உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ், பின்வரும் இரண்டு பிரிவுகளாக பயனாளிகள் வரையறுக்கப்பட்டுள்ளன :-
- பட்டதாரி அல்லாதவர்கள்.
- பட்டதாரி அல்லது டிப்ளமோ உடையவர்கள்.
- இத்திட்டத்தின் கீழ், பட்டதாரி அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 25,000/- வழங்கப்படும்.
- பட்டதாரி விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 50,000/- வழங்கப்படும்.
- மேலும், பட்டதாரி மற்றும் பட்டதாரி அல்லாத தம்பதிகளுக்கு 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம் திருமாங்கல்யத்திற்க்காக வழங்கப்படும்.
- பயனாளிகள் பொது சேவை மையத்தின் மூலம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் பயன்களைப் பெறலாம் (CSC).
திட்டத்தின் பயன்கள்
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ் தகுதியான தம்பதியினருக்கு பின்வரும் சலுகைகள் வழங்கப்படும் :-
பயனாளி பயன்கள் பட்டதாரி அல்லாதவர்களுக்கு - நிதி உதவித்தொகை ரூ. 25,000/- :-
- ரூ. 15,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
- ரூ. 10,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
- 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு உடையவர்கள் - நிதி உதவித்தொகை ரூ. 50,000/- :-
- ரூ. 30,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
- ரூ. 20,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
- 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
- நிதி உதவித்தொகை ரூ. 25,000/- :-
தகுதி நெறி முறைகள்
- கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்த தம்பதிகள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவர்கள் :-
- தம்பதியர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- தம்பதியரிள் ஒருவர் எஸ்சி/ எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- வருமான வரம்பு இல்லை.
- மணமகளின் வயது 18 ஆக இருக்க வேண்டும்.
- மணமகனின் வயது 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
- குறைந்தபட்ச கல்வித் தகுதி தேவையில்லை.
தேவையான ஆவணங்கள்
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ், நிதி உதவிக்கு விண்ணப்பிக்கும் போது பின்வரும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன :-
- திருமணச் சான்றிதழ்.
- மணமகள் கல்விச் சான்றிதழ்.
- சாதி சான்றிதழ்.
- தமிழ்நாட்டின் வசிப்பிடச் சான்று.
- மணமகன் மற்றும் மணமகளின் வயதுச் சான்று.
- ஆதார் அட்டை.
- திருமண புகைப்படம்.
விண்ணப்பிக்கும் முறை
- பயனாளிகள் பொது சேவை மையத்தின் மூலம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் பயன்களைப் பெறலாம்.
- விண்னப்ப படிவத்தை பயனாளியின் சார்பாக, முகவர் மூலம் பூர்த்தி செய்து தேவையான ஆவணத்தை பதிவேற்றவும்.
- பின்னர், பயனாளியின் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்கள் மாவட்ட சமூக நல அலுவலரால் ஆய்வு செய்யப்படும்.
- விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டாலும் நிராகரித்தாலும் பயனாளிக்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
- ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், நிதித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் மாற்றப்படும்.
திட்டத்தின் அம்சங்கள்
- திருமண தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள், பயனாளி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- மணமகள் மற்றும் மணமகனின் வயது வரம்பு 18 மற்றும் 21 ஆக இருக்க வேண்டும்.
- சாதிகளுக்கிடையேயான கலப்பு திருமணத் திட்டத்தில், பயனாளிகள் பின்வரும் தகுதியுடையவராக இருக்க வேண்டும் :-
- தம்பதியரிள் ஒருவர் பட்டியல் இண/ பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராகவும், மற்றவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- தம்பதியரிள் ஒருவர் முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், மற்றவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ் பயன்களை பெற தேவையான கல்வித் தகுதிகள் பின்வருமாரு :-
- ரூ. 25,000/- நிதி உதவிக்கு, மணமகள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மணமகள் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்றால் அவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
- ரூ. 50,000/- நிதி உதவிக்கு, மணமகள் முறைசார்ந்த கல்லூரிகள், தொலைதூர கல்வி/ அரசு அங்கீகரிக்கப்பட்ட திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ பெற்றவர்கள் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
முக்கியமான இணைப்புகள்
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் விண்ணப்ப நிலை.
- சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு.
- மாவட்ட சமூக நல அலுவலர்கள் தமிழ்நாடு தொடர்பு விவரங்கள்.
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் வழிகாட்டுதல்கள்.
தொடர்பு விபரங்கள்
- தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உதவி எண் :- 044-24351891.
- சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு
எண். 1 பனகல் மாளிகை கட்டிடம், 2வது தளம்,
(கலைஞர் ஆர்ச் அருகில்), ஜீனிஸ் சாலை,
சைதாப்பேட்டை, சென்னை - 600015.
Also see
Do you have any question regarding schemes, submit it in scheme forum and get answers:
Feel free to click on the link and join the discussion!
This forum is a great place to:
- Ask questions: If you have any questions or need clarification on any aspect of the topic.
- Share your insights: Contribute your own knowledge and experiences.
- Connect with others: Engage with the community and learn from others.
I encourage you to actively participate in the forum and make the most of this valuable resource.
Stay Updated
×
Comments
Intercaste marriage
Intercaste scheme apply panni 3year aaguthu aana innum amount varala gold varala apparam intercasteku oru government job undunu sonnanga athum yeathum varala
Intercaste marriage
Endha application link la neenga form fill up paninga sister.
Respected Sir / Madam My…
Respected Sir / Madam
My self leela I like to get a scheme application details to fill up the inter-caste and inter-religion marriage scheme form to fill up.need assistance and please consider this comment as soon as posible. I need to register the for this form sir/ mam.
Kalyanpur
Kabulpur Jaunpur UP62
புதிய கருத்தை சேர்