Highlights
பயனாளி | பயன்கள் |
---|---|
பட்டதாரி அல்லாதவர்களுக்கு |
|
பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு உடையவர்கள் |
|
Customer Care
- தமிழ்நாடு சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை உதவி எண் :- 044-24351891.
திட்டம் பற்றிய சிறப்பு பார்வை |
|
---|---|
திட்டத்தின் பெயர் | ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம். |
பயன்கள் |
|
பயனாளி | ஏழை விதவைகளின் மகள்கள். |
குறைத் தீர்க்கும் பிரிவு | சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு. |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். |
திட்ட அறிமுகம்
- தமிழகத்தில் பெண்கள் நலனுக்காக தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- இந்தத் திட்டங்களில் ஒன்றுதான் 'ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம்'.
- தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையாள் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
- இந்தத் திட்டத்தைத் தொடங்குவதன் முக்கிய நோக்கமானது, ஏழை விதவைகள் தங்கள் மகள்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்க்காக நிதி உதவி வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் கீழ் விதவை தாய்மார்களுக்கு அவர்களின் மகளின் திருமணத்திற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பின்வரும் இரண்டு வகைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன :-
- பட்டதாரிகள் அல்லாதவர்கள்.
- பட்டதாரி அல்லது பட்டயப்படிப்பு உடைய விண்ணப்பதாரர்.
- இத்திட்டத்தின் கீழ், பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ. 25,000/- உதவித்தொகை வழங்கப்படும்.
- பட்டதாரிகளுக்கு ரூ. 50,000/- நிதி உதவி வழங்கப்படும்.
- மேலும் பட்டதாரி மற்றும் பட்டதாரி அல்லாத இருவருக்கும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.
- ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் பலங்களை பெற, பொது சேவை மையம் (CSC)மூலம் பயனாளிகள் விண்ணப்பிக்களாம்.
திட்டத்தின் பயன்கள்
- ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு பின்வரும் பயன்கள் கிடைக்கப்படும் :-
பயனாளி பயன்கள் பட்டதாரி அல்லாதவர்களுக்கு - நிதி உதவித்தொகை ரூ. 25,000/- :-
- ரூ. 15,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
- ரூ. 10,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
- 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு உடையவர்கள் - நிதி உதவித்தொகை ரூ. 50,000/- :-
- ரூ. 30,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
- ரூ. 20,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
- 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
- நிதி உதவித்தொகை ரூ. 25,000/- :-
தகுதி நெறி முறைகள்
- கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தியடைபவர்கள், ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் :-
- தமிழ்நாட்டின் குடியிருப்பாளாக இருக்க வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ. 72,000/-.
- குறைந்தபட்ச கல்வித் தகுதி தேவையில்லை.
- மணமகளின் வயது குறைந்தது 18.
- மணமகனின் வயது 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
- ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பொழுது தேவைப்படும் ஆவணங்கள் பின்வருமாறு :-
- மணமகன் மற்றும் மணமகளின் வயதுச் சான்று.
- விதவை சான்றிதழ்.
- ஆதார் அட்டை.
- சாதிச் சான்றிதழ்.
- திருமண அழைப்பிதழ்.
- குடும்ப அட்டை.
- வருமானச் சான்றிதழ்.
- கணவரின் இறப்புச் சான்றிதழ்.
- மணமகள் கல்விச் சான்றிதழ்.
- தமிழ்நாட்டின் இருப்பிடச் சான்று.
விண்ணப்பிக்கும் முறை
- பயனாளிகள் அருகிலுள்ள பொது சேவை மையத்தின் மூலம், ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிக்கலாம்.
- பயனாளியின் சார்பாக அங்குள்ள முகவர் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணத்தை பதிவேற்றம் செய்வார்.
- அதன் பிறகு பயனாளியின் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்கள் மாவட்ட சமூக நல அலுவலரால் ஆய்வு செய்யப்படும்.
- ஏற்க்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தை அதற்க்குறிய பயனாளிக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
- ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, நிதி உதவித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
திட்டத்தின் அம்சங்கள்
- பயனாளர்கள், ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டத்தின் பயன்களை பெற, திருமண தேதிக்கு 40 நாட்களுக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்
- மணமகள் மற்றும் மணமகனின் வயது குறைந்தது 18 மற்றும் 21 ஆக இருக்க வேண்டும்.
- இந்த திட்டத்தின் கீழ், விதவை தாய்மார்கள் இரண்டு வகைப்படுவர் :-
- பட்டதாரி அல்லாத மணப்பெண், உதவித்தொகை ரூ. 25,000/- பெற தகுதியுடையவர்.
- பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு உடைய மணப்பெண், உதவித்தொகை ரூ. 50,000/- பெற தகுதியுடையவர்.
- நிதியுதவியானது நேரடியாக விதவை தாய்மார்க்கு வழங்கப்படும்.
- தாய்க்கு மரணம் ஏற்பட்டால், நிதியுதவியானது மணமகளுக்கு சேரும்.
- விதவை தாய்மார்க்கு இரண்டு மகள்கள் இருந்தால், ஒரே ஒரு மகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்.
முக்கியமான இணைப்புகள்
- ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம் விண்ணப்ப நிலை.
- சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு.
- மாவட்ட சமூக நல அலுவலர்கள் தமிழ்நாடு தொடர்பு விவரங்கள்.
- ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம் வழிகாட்டுதல்கள்.
தொடர்பு விபரங்கள்
- தமிழ்நாடு சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை உதவி எண் :- 044-24351891.
- சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு,
எண். 1 பனகல் மாளிகை கட்டிடம், 2வது தளம்,
(கலைஞர் ஆர்ச் அருகில்), ஜீனிஸ் சாலை,
சைதாப்பேட்டை, சென்னை - 600015.
Also see
Matching schemes for sector: Marriage
Sno | CM | Scheme | Govt |
---|---|---|---|
1 | தமிழ்நாடு திருமண உதவித் திட்டம் | தமிழ்நாடு | |
2 | டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் | தமிழ்நாடு | |
3 | டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் | தமிழ்நாடு | |
4 | அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம் | தமிழ்நாடு | |
5 | மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் | தமிழ்நாடு |
Subscribe to Our Scheme
×
Stay updated with the latest information about ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம்
புதிய கருத்தை சேர்