தமிழ் நாடு மகளிர் உரிமை தொகை திட்டம

author
Submitted by shahrukh on Thu, 02/05/2024 - 13:14
தமிழ்நாடு CM
Scheme Open
Highlights

குறுந்தகவல் கிடைக்க பெறாத மகளிர் 30 நாட்களுக்குள் வருவாய் திட்ட அலுவலர் அலுவலகத்தில் மேல் முறையீடு செய்யலாம.

  • தமிழக மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ்கண்ட பலன்களை பயனாளிகள் கிடைக்க பெறுவர் :-
    • தகுதியுள்ள மகளிருக்கு மாதம் தோறும் உதவி தொகையாக 1000/ ரூபாய் வழங்கப்படும்.
Customer Care
திட்டம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் தமிழ் நாடு மகளிர் உரிமை தொகை திட்டம்.
துவங்கிய தேதி 15th செப்டம்பர் 2023.
பயன்கள் நிதி உதவி மாதம் தோறும் ரூபாய் 1000/-.
பயனாளிகள் தமிழ்நாடு மகளிர்.
அதிகாரபூர்வ இணையதளம் தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்ட இணையதளம்.
முனையம் மற்றும் துறை தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை.
சந்தா தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்டம் பற்றிய உடனடி தகவலுக்கு
எங்களுடன் இணையுங்கள்/ பதிவில் இணைந்திருங்கள்.
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்டம் மூலமாக.

திட்ட அறிமுகம்

  • தமிழக அரசு புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிகிறது.
  • ஒவ்வோர் நலத்திட்டத்தின் நோக்கமும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை மேன்மையுற செய்வதே.
  • பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இல்லத்தரசிகளான பெண்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக போராடுகின்றனர்.
  • தமிழக அரசின் தமிழக மகளிர் நிதி நிலை மேம்பாடு பற்றிய சிந்தனையின் விளைவே இத்திட்டமாகும்.
  • அதனால் தமிழக அரசு தனது 2023-24 நிதிநிலை அறிக்கையில் புதிய திட்ட வரைவாக மகளிர் பொருளாதார தன்னிறைவு வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிமுகம் செய்தது.
  • மகளிர் உரிமை தொகை திட்டம் பல் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறது வகையே :-
    • "தமிழ்நாடு மகளிர் நிதி உதவி திட்டம்".
    • "தமிழ்நாடு மகளிர் உரிமை நிதி".
    • "தமிழ்நாடு மகளிர் கலைஞர் மகளிர் நிதி உதவி திட்டம்".
    • "தமிழ்நாடு மகளிர் மாதாந்திர நிதி உதவி திட்டம்".
    • "கலைஞர் மகளிர் உரிமை திட்டம்".
  • தமிழக மகளிர் உரிமை தொகை திட்டத்தின் நோக்கமே இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதே.
  • தமிழக மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உதவி தொகையாக ரூபாய் 1000/ வழங்குதல்.
  • இந்த மாதாந்திர உதவி தொகை பயனாளிகளான மகளிரின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும் விலை வாசி உயர்வுகளை நேர் செய்து கொள்ளவும் உதவுகிறது.
  • தமிழக அரசு தமிழக மகளிர் உரிமை தொகை திட்டத்தை 15th செப்டம்பர்  2023 முதல் துவங்கி செயல்படுத்தி வருகிகிறது.
  • இந்த தேதியை தேர்ந்து எடுத்ததற்கு தமிழ் தாயின் மகனாக மதிக்கப் மதிக்கப் பெறும் பெரும் பேரறிஞர் அண்ணா 100ஆண்டு நிறைவு விழாவை சிறப்பு செய்யவே இந்த நாள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது
  • தமிழக அரசு “தமிழக மகளிர் உரிமை தொகை” இத்திட்டத்திற்காக 7000/- கோடி ருபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
  • தமிழக அரசு “தமிழக மகளிர் உரிமை தொகை திட்டமே” நாட்டின் மிக உயர்ந்த சமூக மேம்பாட்டு நல நிதியாக இருக்கும்.
  • தமிழக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை அரசாணை மூலம் வழிகாட்டி நடை//நெறி முறைகளையும் வெளியீடு செய்ததோடு பயனாளிகளுக்கான பதிவையும் துவங்கி உள்ளது.
  • மகளிர் பயனாளிகள் தங்களை தாங்களே அருகில் உள்ள நியாய விலை கடைகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
  • இந்த திட்டத்தின் பதிவானது விண்ணப்ப படிவங்கள் மூலம் தங்களது நியாய விலை கடைகளிலேயே நடைபெறும்.
  • தமிழக மகளிர் கைபேசி குறுந்செய்தி மூலம் 18th செப்டம்பர் 2023 தகவல் கிடைக்க பெறுவார்கள்.
  • சில மகளிருக்கு குறுந்செய்தி கிடைக்க பெற்றனர் சிலருக்கு குறுந்செய்தி கிடைக்க பெறவில்லை.
  • தங்களது விண்ணப்பத்தின் குறைபாடுகளால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பத்தில் உள்ள குறைபாடுகளால் நிராகரிக்கப்படும் மகளிர்.
  • நிராகரிக்கப்பட்ட மகளிர் நிராகரிப்பு பற்றிய குறுந்செய்தி கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் தங்களது வட்டார வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
  • மகளிர் பயனாளிகள் தங்களது விண்ணப்ப நிலை அல்லது உரிமைத்தொகை பெறுதல் நிலை பற்றியும் தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்ட இணையதளம் வாயிலாக அறியலாம்.

திட்டத்தின் பயன்கள்

  • தமிழக மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ்கண்ட பலன்களை பயனாளிகள் கிடைக்க பெறுவர் :-
    • தகுதியுள்ள மகளிருக்கு மாதம் தோறும் உதவி தொகையாக 1000/ ரூபாய் வழங்கப்படும்.

Tamil Nadu Magalir Urimai Thogai Scheme Eligibility

மகளிர் பயனாளிகள் தகுதி நெறி முறைகள்

  • மகளிர் பயனாளிகள் தமிழ் நாட்டில் நிரந்தர குடிமக்களாக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் மகளிராக மட்டுமே இருக்க வேண்டும்.
  • மகளிர் பயனாளிகள் குடும்ப தலைவராக இருத்தல் வேண்டும்.
  • மகளிர் பயனாளிகள் 21 வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • மகளிர் பயனாளிகளின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு  2,50,000/ ரூபாய் மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • மகளிர் பயனாளிகளின் நில உடைமை நன்செய் நிலமாக இருந்தால் 5ஏக்கரும் புன்செய் நிலமாக இருந்தால் 10 ஏக்கருக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • மகளிர் பயனாளியின் மின்சார பயனீடு ஆண்டுக்கு 3600 யூனிட்டை கடந்து விட கூடாது.

தேவையான ஆவணங்கள்

  • மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கும் மகளிருக்கு பின் வரும் ஆவணங்கள் தேவைப்படும் :-
    • தமிழ்நாடு இருப்பிட சான்று.
    • நியாயவிலை/குடும்ப அட்டை.
    • ஆதார் சான்று.
    • வருமான சான்று - வருமான சான்றுகளை இணைக்க தேவை இல்லை.
    • சாதி சான்றிதழ் (தேவைப்பட்டால்)
    • வங்கி கணக்கு விவரஙகள்.
    • கைபேசி எண்.
    • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

விண்ணப்பிக்கும் முறை

  • தமிழ் நாடு மகளிர் உரிமை தொகை திட்டம் 2023-24 நிதிநிலை அறிக்கையில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த தேதியை தேர்ந்து எடுத்ததற்கு காரணம் தமிழ் தாயின் மகனாக மதிக்கப் பெறும் பெரும் பேரறிஞர் அண்ணா 100ஆண்டு நிறைவு விழாவை சிறப்பு செய்யவே, இந்த நாள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு தமிழக மகளிர் உரிமை தொகை திட்டத்தை  15th செப்டம்பர்  2023 முதல் துவங்கி செயல்படுத்தி வருகிகிறது.
  • தமிழக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை அரசாணை மூலம் வழிகாட்டி நடை//நெறி முறைகளையும் வெளியீடு செய்ததோடு பயனாளிகளுக்கான பதிவையும் துவங்கி உள்ளது.
  • மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான அரசு முகாம்களையும் மகளிர் பயனாளிகளுக்காக அரசு துவங்கி உள்ளது.
  • முதற்கட்டமாக அரசு முகாம்கள்  நியாய விலை கடைகளில் துவங்க உள்ளன.
  • மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் நியாய விலை கடைகளில் கிடைக்கும்.
  • நியாய விலை கடைகளில் உள்ள தன்னார்வலர்கள் மகளிர் உரிமை தொகை படிவத்தை பூர்த்தி செய்ய மகளிர் பயனாளிகளுக்கு உதவுவார்கள்.
  • பயனாளிகள் மாவட்ட வாரியாக தங்களுக்கான முகாம்களை/ முகாம் விவரங்களை பதிவுக்காக இங்கே அணுகி தெரிந்து கொள்ளலாம்.
  • பயனாளிகள் தங்களது பதிவிற்கான முகாம்களை அணுகி தங்களை பதிவு செய்து கொள்வதுடன் மகளிர் உரிமை திட்டத்தில் இணைந்து ரூபாய் 1௦௦௦/ பெரும் தகுதியை பெறுங்கள்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக மகளிர் கைபேசி குறுந்செய்தி மூலம் 18th செப்டம்பர் 2023 தகவல் கிடைக்க பெறுவார்கள்.
  • சில மகளிருக்கு குறுந்செய்தி கிடைக்க பெற்றனர் சிலருக்கு குறுந்செய்தி கிடைக்க பெறவில்லை 
  • தங்களது விண்ணப்பத்தின் குறைபாடுகளால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பத்தில் உள்ள குறைபாடுகளால் நிராகரிக்க படும் மகளிர் அதற்காக வருந்த வேண்டியதில்லை.
  • நிராகரிக்கப்பட்ட மகளிர் நிராகரிப்பு பற்றிய குறுந்செய்தி கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் தங்களது வட்டார வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
  • மாவட்ட வருவாய் அலுவலர் மேல்முறையீடு விண்ணப்பத்தின் உண்மை நிலைப்பாட்டை அறிந்து சீர் செய்த பின் அல்லது விண்ணப்பத்தின் குறைபாட்டை சீர் செய்த பின் மகளிர் உரிமை திட்டநிதி கிடைக்க பெறுவர்.
  • மேல் முறையீடு செய்ய மனுதாரர்கள் இணைய சேவை மையத்தை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
  • மகளிர் பயனாளிகள் தங்களது இணைய சேவை மையத்தை இங்கே அறிந்து கொள்ளலாம்.

Tamil Nadu Magalir Urimai Thogai Scheme How to Apply

முக்கிய இணைய தள இணைப்பு முகவரிகள்

வாடிக்கையாளர்/ பயனாளிகள் இணைய/ சேவை மையம்

Comments

Your Name
R.Akbar Ali Khan
கருத்து

My Ration Card No . NPHH 33393926xxxx.My wife 's name: A.Mubeena Banu. A.Mubeena Banu's Aadhaar No. 2032 0037 xxxx. Her Bank Account No.0795010000xxxx. IOB 0795 KILIYANUR. Mubeena Banu's New Mobile Number 786978xxx. Please UPDATE THIS NUMBER FOR HER MAGALIR URIMAI THOGHAI. For the last two months she didn't receive the money. Please HELP ME TO CHANGE HER MOBILE NUMBER.

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்

Rich Format