ஸ்வநாத் உதவித்தொகை திட்டம்

author
Submitted by shahrukh on Tue, 04/06/2024 - 12:36
CENTRAL GOVT CM
Scheme Open
Swanath Scheme Logo
Highlights
  • சுவநாத் உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு பின்வரும் பயன்களை வழங்குகிறது :-
    • கல்வி உதவித் தொகை ரூ. 50,000/- வழங்கப்படுகிறது.
    • பட்டப்படிப்புக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகள் மற்றும் டிப்ளமா படிப்புக்கு 3 ஆண்டுகள் என உதவித்தொகை வழங்கப்படும்.
Customer Care
  • ஸ்வநாத் உதவித்தொகை திட்ட உதவி எண் :- 011-29581118.
  • ஸ்வநாத் உதவித்தொகை திட்ட உதவி மைய மின்னஞ்சல் :- consultant2stdc@aicte-india.org.
  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) உதவி எண் :- 011-26131497.
  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) உதவி மைய மின்னஞ்சல் :- ms@aicte-india.org.
  • தேசிய உதவித்தொகை இணையதளம் உதவி மைய எண் :- 0120-6619540.
  • தேசிய உதவித்தொக
திட்டம் பற்றிய சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் ஸ்வநாத் உதவித்தொகை திட்டம்.
எண்ணிக்கை விவரம்
  • பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 1,000 இடங்கள்.
  • டிப்ளமா மாணவர்களுக்கு 1,000 இடங்கள்.
உதவித்தொகை தொகை ரூ. 50,000/- ஆண்டுக்கு.
உதவித்தொகையின் காலம்
  • பட்டப்படிப்பு மாணவர்களுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகள்.
  • டிப்ளமோ மாணவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள்.
குறைத் தீர்க்கும் துறை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு.
குறைத் தீர்க்கும் அமைச்சகம் பள்ளிக் கல்வி துறை/ உயர்கல்வித் துறை.
குழு சேர புதுப்பிப்புச் செய்திகளைப் பெற இங்கே குழுசேரவும்.
விண்ணப்பிக்கும் முறை ஸ்வநாத் உதவித்தொகை திட்டம் ஆன்லைன் விண்ணப்பப் படிவம் மூலம்.

திட்ட அறிமுகம்

  • ஸ்வநாத் உதவித்தொகை திட்டம் 100% மத்திய நிதியுதவி திட்டமாகும்.
  • இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் செயல்படுத்தப்படுகிறது.
  • கோவிட்-19 காரணமாக உயிரிலந்த பெற்றோர்களின் பிள்ளைகள் மற்றும் உயிர்த்தியாகம் செய்த ஆயுதப்படையினர்களின் பிள்ளைகள் மற்றும் உயிர்த்தியாகம் செய்த மத்திய துணை ராணுவப் படையினர்களின் பிள்ளைகள் ஆகிய ஆதரவற்ற மாணவர்கள் கல்வி பெறவதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
  • பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை முடிப்பதற்க்கான உதவியை வழங்குவதே ஸ்வநாத் உதவித்தொகைத் திட்டத்தைத் தொடங்குவதன் முக்கிய நோக்கமாகும்.
  • கல்லூரிக் கட்டணம் செலுத்துவதற்கும், புத்தகங்கள், உபகரணங்கள், எழுதுபொருள் அல்லது கணினி போன்றவற்றை வாங்குவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஸ்வநாத் உதவித்தொகை திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படும்.
  • தகுதி பெற்ற மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு கல்வி உதவித்தொகையாக ரூ. 50, 000/- வழங்கப்படும்.
  • ஒவ்வொரு ஆண்டும் 2,000 மாணவர்களுக்கு சுவநாத் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
  • 1, 000 இடங்கள் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மற்றும் 1,000 இடங்கள் பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பட்டப்படிப்பு மாணவர்களுக்கு உதவித்தொகையின் அதிகபட்ச காலம் 4 ஆண்டுகள் ஆகும்.
  • டிப்ளமா மாணவர்களுக்கு உதவித்தொகையின் அதிகபட்ச காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
  • மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ 8 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் சுவநாத் உதவித்தொகை திட்டத்தின் பயனைப் பெற தகுதியில்லை.
  • மாணவர்கள் தேசிய உதவித்தொகை இணையதளம் வழியாக ஆன்லைன் விண்ணப்ப படிவம் மூலம் சுவநாத் உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
  • மாணவர்கள் 2023-2024 ஆம் ஆண்டிற்கான உதவித்தொகையின் விண்ணப்ப காலம் 31-01-2024 வரை அல்லது அதற்கு முன்.
  • ஸ்வநாத் உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31, 2024 ஆகும்.
  • உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்தலுக்கு உட்பட்டது.

திட்டத்தின் பயன்கள்

  • சுவநாத் உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு பின்வரும் பயன்களை வழங்குகிறது :-
    • கல்வி உதவித் தொகை ரூ. 50,000/- வழங்கப்படுகிறது.
    • பட்டப்படிப்புக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகள் மற்றும் டிப்ளமா படிப்புக்கு 3 ஆண்டுகள் என உதவித்தொகை வழங்கப்படும்.

தகுதி நிபந்தனைகள்

  • சுவநாத் உதவித்தொகையானது பின்வரும் நிபந்தனைகள் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் :-
    • ஆதரவற்ற பிள்ளைகள்.
    • COVID-19 காரணமாக தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்தவர்கள்.
    • உயிர்த்தியாகம் செய்த ஆயுதப்படைகள் மற்றும் மத்திய துணை ராணுவப் படைகயினரின் பிள்ளைகள்.
  • மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பட்டம்/ டிப்ளோமா நிலை படிப்பைத் முரைசார்ந்த மாணவராக பயின்று கொண்டிருக்க வேண்டும். (1 வது/2 வது/3 வது/ 4 வது ஆண்டில் இருக்க வேண்டும்)
  • மாணவர் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பயின்று கொண்டிருக்க வேண்டும்.
  • மாணவர் எந்தவொரு மத்திய/ மாநில/ அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) அங்கீகரிக்கப்பட்ட உதவித்தொகையின் பயனாளியாக இருக்கக்கூடாது.

தேவையான ஆவணங்கள்

மாணவர் வகை கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள்
ஆதரவற்ற மாணவர்கள்
  • தந்தை மற்றும் தாயின் இறப்புச் சான்றிதழ் (இருந்தால்) அல்லது வட்டாட்சியர்/ எஸ். டி. எம் வழங்கிய சான்றிதழ். (இணைப்பு - Iல் குறிப்பிட்டவாரு)
  • நிறுவனத்தால் வழங்கப்பட்ட போனஃபைட் சான்றிதழ்.
  • 10-வது மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்/ அதற்குச் நிகரான பாடநெறி பட்டப்படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ்.
  • 10 ஆம் வகுப்பு அல்லது அதற்குச் நிகரான டிப்ளமா நிலை படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ்.
  • எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி - என்சிஎல் சான்றிதழ்.
COVID-19 காரணமாக பெற்றோரில் ஒருவர்
அல்லது இருவரையும் இழந்த மாணவர்கள்
  • தந்தை/ தாய் அல்லது இருவரின் இறப்புச் சான்றிதழ், குறிப்பாக கோவிட்-19 காரணமாக இறப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
  • பெற்றோர் (தந்தை அல்லது தாய்) ஒருவர் உயிருடன் இருந்தால் நடப்பு ஆண்டின் வருமானச் சான்றிதழ்.
  • நிறுவனங்களால் வழங்கப்பட்ட போனஃபைட் சான்றிதழ்.
  • 10-வது மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்/ அதற்குச் நிகரான பாடநெறி பட்டப்படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ்.
  • 10 ஆம் வகுப்பு அல்லது அதற்குச் நிகரான டிப்ளமா நிலை படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ்.
  • எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி - என்சிஎல் சான்றிதழ்.
ஆயுதப்படைகள் மற்றும்
மத்திய துணை ராணுவப் படைகளில்
உயிர்த்தியாகம் (ஷஹீத்) செய்தவர்களின்
பிள்ளைகள்
  • இறப்புச் சான்றிதழ்.
  • ஆயுதப்படைகள்/ மத்திய துணை ராணுவப் படைகளால் வழங்கப்பட்ட இறப்புச் (ஷஹீத்) சான்றிதழ்.
  • நிறுவனங்களால் வழங்கப்பட்ட போனஃபைட் சான்றிதழ்.
  • 10-வது மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்/ அதற்குச் நிகரான பாடநெறி பட்டப்படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ்.
  • 10 ஆம் வகுப்பு அல்லது அதற்குச் நிகரான டிப்ளமா நிலை படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ்.
  • எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி - என்சிஎல் சான்றிதழ்.
  • குடும்ப வருமானச் சான்றிதழ்.

விண்ணப்பிக்கும் முறை

  • சுவநாத் உதவித்தொகை திட்டம் ஆன்லைன் விண்ணப்ப படிவம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
  • தேசிய உதவித்தொகை இணையதளம் வழியாக சுவநாத் உதவித்தொகை திட்டம் ஆன்லைன் விண்ணப்ப படிவம் பெறலாம்.
  • மாணவர்கள் முதலில் தங்களை பதிவு செய்துகொள்ள, புதிய பதிவு என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பதாரர், சுவநாத் உதவித்தொகை திட்டம் பதிவிற்க்கான படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும் :-
    • குடியிருப்பு மாநிலம்.
    • உதவித்தொகையின் வகை அதாவது பள்ளிப்படிப்பு நிறைவடையும்  முன் அல்லது பள்ளிப்படிப்பு நிறைவடைந்த பின்.
    • பெயர்.
    • திட்ட வகை.
    • பிறந்த தேதி.
    • பாலினம்.
    • கைபேசி எண்.
    • மின்னஞ்சல் முகவரி.
    • வங்கி ஐஎஃஎஸ்சி (IFSC) குறியீடு.
    • வங்கி கணக்கு எண்.
    • ஆதார் எண்.
  • தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பதிவு என்பதைக் கிளிக் செய்க.
  • மாணவரின் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு, தேசிய உதவித்தொகை இணையதளம் மூலம் உள்நுழைவு விவரங்ள் அனுப்பப்படும்.
  • கிடைக்கப்பெற்ற உள்நுழைவு விவரங்ள் கொண்டு, ஸ்வநாத் உதவித்தொகை திட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க உள்நுழைக.
  • சுவநாத் உதவித்தொகை திட்டத்தை தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலானது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) இணையதளத்தில் கிடைக்கும்.
  • இந்தத் திட்டம் புதுப்பிக்கப்படுவதற்கு உட்பட்டது, எனவே விண்ணப்பதாரர் ஒவ்வொரு ஆண்டும் சுவநாத் உதவித்தொகை திட்ட விண்ணப்பத்தை புதுப்பிக்க வேண்டும்.
  • ஸ்வநாத் உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேசிய உதவித்தொகை இணையதளம் செயலில் உள்ளது.
  • மாணவர்கள் சுவநாத் உதவித்தொகை திட்டத்திற்கு 31-01-2024 வரை அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.
  • மாணவர்கள் சுவநாத் உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31, 2024.

தேர்வு நடைமுறை

பட்டப்படிப்பு நிலைக்கானது

  • 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான தகுதித் தேர்வு அடிப்படையில் சுவநாத் உதவித்தொகைத் திட்டத்திற்க்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் சமநிலை போட்டியாளர் இருந்தால், பின்வரும் நடைமுறை பின்பற்றப்படும் :-
    • 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர் அதிக தரவரிசை பெறுவார்.
    • 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களிலும் சமநிலை ஏற்ப்பட்டால், மூத்த வயதுடையவர் அதிக தரவரிசை பெறுவார்.
    • மேற்கூறிய முறையில் சமநிலை ஏற்ப்பட்டால், குறைந்த வருடாந்திர குடும்ப வருமானம் கொண்டவர் அதிக தரவரிசை பெறுவார்.

டிப்ளமோ நிலைக்கானது

  • டிப்ளமா படிப்பைத் தொடர தகுதித் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
  • டிப்ளமா படிப்புக்கான தகுதி தேர்வு 10 ஆம் வகுப்பு ஆகும்.
  • தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் சமநிலை போட்டியாளர் இருந்தால், பின்வரும் நடைமுறை பின்பற்றப்படும் :-
    • மூத்த வயதுடையவர் அதிக தரவரிசை பெறுவார்.
    • வயது அடிப்படையிலும் சமநிலை ஏற்ப்பட்டால், குறைந்த வருடாந்திர குடும்ப வருமானம் கொண்டவர் அதிக தரவரிசை பெறுவார்.

திட்டத்தின் அம்சங்கள்

  • ஸ்வநாத் உதவித்தொகை திட்டம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கப்படும்.
  • இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகும்.
  • சரியான ஆதார் அட்டை இல்லாமல் எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.
  • விண்ணப்பதாரர் இடையில் பாடத்திட்டத்தை கைவிட்டால், அவர்/ அவள் ஸ்வநாத் உதவித்தொகை திட்டத்தின் கீழ் மேலும் உதவித்தொகைக்கு தகுதி பெற மாட்டார்கள்.
  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கப்படும்.
  • விண்ணப்பதாரர் எந்தவொரு மத்திய/ மாநில/ அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) உதவித்தொகையின் பயனாளியாக இருக்கக்கூடாது.
  • ஒவ்வொரு ஆண்டும் 2,000 தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் உதவித்தொகை கிடைக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் பாடத்திட்டத்தின் எந்த ஆண்டிலும் திட்டத்தின் பயனைப் பெறலாம்.
  • மாணவர்களுக்கு கணினி, எழுதுபொருள், புத்தகங்கள், உபகரணங்கள், மென்பொருள் போன்றவற்றை வாங்குவதற்கு உதவித்தொகை வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் விடுதிக் கட்டணம் அல்லது மருத்துவக் கட்டணம் ஆகியவற்றுக்கான கூடுதல் மானியம் வழங்கப்படாது.
  • சுவநாத் உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வு முறை முற்றிலும் தகுதி அடிப்படையில் இருக்கும்.
  • தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் தொழில்நுட்ப டிப்ளோமா படிக்கும் மாணவர்கள் உதவித்தொகைக்கு தகுதியுடையவர்கள்.
  • சுவநாத் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) இணையதளத்தில் பெறலாம்.
  • ஒட்டுமொத்த தரப் புள்ளி (CGPA)ஐ சதவீதமாக மாற்றுவதற்கான கணக்கீடு முறையானது, CGPAஐ 9.5 உடன் பெருக்குவதாகும் (CGPA × 9.5)
  • உதவித்தொகையானது மானவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.
  • மாணவர் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற தவறினால், அவர்களின் உதவித்தொகை நிருத்தப்படும்.
  • உதவித்தொகை விண்ணப்பத்தைப் புதுப்பிக்கும் போது பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற சான்றிதழைப் பதிவேற்றுவது கட்டாயமாகும்.

முக்கியமான படிவங்கள்

முக்கியமான இணைப்புகள்

தொடர்பு விபரங்கள்

  • ஸ்வநாத் உதவித்தொகை திட்ட உதவி எண் :- 011-29581118.
  • ஸ்வநாத் உதவித்தொகை திட்ட உதவி மைய மின்னஞ்சல் :- consultant2stdc@aicte-india.org.
  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) உதவி எண் :- 011-26131497.
  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) உதவி மைய மின்னஞ்சல் :- ms@aicte-india.org.
  • தேசிய உதவித்தொகை இணையதளம் உதவி மைய எண் :- 0120-6619540.
  • தேசிய உதவித்தொகை இணையதளம் உதவி மைய மின்னஞ்சல் :- helpdesk@nsp.gov.in.
  • மாணவர் மேம்பாட்டு பிரிவு (StDC),
    அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்
    வசந்த் குஞ்ச், நெல்சன் மண்டேலா மார்க்,
    புது தில்லி - 110070.

Do you have any question regarding schemes, submit it in scheme forum and get answers:

Feel free to click on the link and join the discussion!

This forum is a great place to:

  • Ask questions: If you have any questions or need clarification on any aspect of the topic.
  • Share your insights: Contribute your own knowledge and experiences.
  • Connect with others: Engage with the community and learn from others.

I encourage you to actively participate in the forum and make the most of this valuable resource.

Comments

Meri application renew nhi…

கருத்து

Nice content

கருத்து

government have to increase…

கருத்து

now i have to wait for next…

கருத்து

is diploma student eligible

கருத்து

Shahid certificate kahan se…

கருத்து

i found difficult in making…

கருத்து

Number not working

கருத்து

mandates are too specific

கருத்து

very supportive

கருத்து

Father got martyred in North…

கருத்து

orphan ki definitiion kya…

கருத்து

In reply to by shekhar (சரிபார்க்கப்படவில்லை)

whose both are dead

கருத்து

both parents died due to…

கருத்து

they stop my scholarship,…

கருத்து

i search all the NSP but…

கருத்து

medical ke liye bhi…

கருத்து

rupees touch down to 80…

கருத்து

Is it on aicte website or…

கருத்து

NSP is open for this scheme…

கருத்து

is in a death certificate a…

கருத்து

my parents died by covid at…

கருத்து

is the martyr certificate…

கருத்து

agr armed force personnel…

கருத்து

SSLC

கருத்து

Atalapur basa Kalyan bidar

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்