Highlights
- மூலதன மானியம் அல்லது திட்டச் செலவில் 25% அல்லது அதிகபட்சம் ரூ. 2,50,000/- தொழில்முனைவோருக்கு வழங்கப்படும்.
- மீதமுள்ள திட்டச் செலவில் வங்கிக் கடன் வழங்கப்படும்.
- இணை பாதுகாப்பு தேவையில்லை.
- கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 5 வருடம் ஆகும்.
- ஒரு தொழில்முனைவோருக்கு அதிகபட்ச திட்டச் செலவு :-
- ரூ. 15,00,000/- உற்பத்திக்காக.
- ரூ. 5,00,000/- வணிகம்/ வர்த்தகம்.
- ரூ. 5,00,000/- சேவை.
திட்டம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை |
|
---|---|
திட்டத்தின் பெயர் | தமிழ்நாடு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம். |
பயன்கள் | தொழில்முனைவோரின் திட்டங்களுக்கு மூலதன மானியம். |
பயனாளிகள் | தமிழக தொழில் முனைவோர். |
குறைத் தீர்க்கும் பிரிவு | சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, தமிழ்நாடு அரசு. |
சந்தா | தமிழகத்தின் இத்திட்டம் தொடர்பான உடனடி தகவலுக்கு எங்களுடன் இங்கே இணைந்திருங்கள். |
விண்ணப்பிக்கும் முறை | வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் ஆன்லைன் விண்ணப்பப் படிவம் மூலம். |
திட்ட அறிமுகம்
- பல இளைஞர்கள் தொழில்முனைவோராக மாறி தொழிலைத் தொடங்க விரும்புகிறார்கள்.
- ஆனால் நிதி நெருக்கடி மற்றும் திட்டங்களின் அதிக செலவு காரணமாக அவர்களில் சிலர் தங்கள் தொழிலைத் தொடங்கும் எண்ணத்தை கைவிடுகிறார்கள்.
- எனவே, சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவ தமிழக அரசு இந்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
- வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் இத்திட்டம் தமிழக அரசின் முக்கிய சமூக நலத் திட்டமாக இருக்கும்.
- இந்தத் திட்டத்தைத கொண்டு வர உள்ள முக்கிய நோக்கம், தமிழக இளைஞர்களுக்கு நிதியுதவி அளித்து, அவர்கள் சொந்தமாக வேலை வாய்ப்பு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட உதவுவதாகும்.
- இத்திட்டம் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்.
- வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், புதிய தொழில் முனைவோர் தங்கள் சொந்த வருமானம் ஈட்டும் வகையில் தமிழக அரசு மூலதன மானியம் வழங்கும்.
- மூலதன மானியம் அல்லது மொத்த திட்டச் செலவில் 25% அல்லது அதிகபட்சம் ரூ. 2,50,000/- வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.
- கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச திட்டச் செலவில் மூலதன மானியம் வழங்கப்படும் :-
தொழில் வகைகள் திட்ட செலவு உற்பத்தி செய்தல் ரூ. 15,00,000/- வணிகம்/ வர்த்தகம் ரூ. 5,00,000/- சேவை ரூ. 5,00,000/- - பயனாளி திட்டச் செலவில் பின்வரும் சதவீதத்தை பங்களிக்க வேண்டும் :-
- பொதுப் பிரிவு பயனாளிகளுக்கு: திட்டச் செலவில் 10%.
- சிறப்பு வகைப் பயனாளிகளுக்கு: திட்டச் செலவில் 5%.
- திட்டச் செலவின் மீதமுள்ள தொகை விண்ணப்பதாரருக்கு வங்கிக் கடனாக வழங்கப்படும்.
- வங்கிக் கடனுக்கு இணை பாதுகாப்பு தேவையில்லை.
- வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள்.
- குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ. 5,00,000/- க்கு குறைவாக உள்ள பயனாளிகள் மட்டுமே மூலதன மானியத்திற்கு தகுதியுடையவர்கள்.
- தமிழ்நாடு வேலையில்லா இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தகுதியான நபர் தமிழ்நாட்டின் தொழில்முனைவோர் மூலதன மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
திட்டத்தின் பயன்கள்
- தமிழ்நாடு அரசின் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், தொழில்முனைவோர்/ விண்ணப்பதாரர்களுக்கு பின்வரும் சலுகைகள் வழங்கப்படும் :-
- மூலதன மானியம் அல்லது திட்டச் செலவில் 25% அல்லது அதிகபட்சம் ரூ. 2,50,000/- தொழில்முனைவோருக்கு வழங்கப்படும்.
- மீதமுள்ள திட்டச் செலவில் வங்கிக் கடன் வழங்கப்படும்.
- இணை பாதுகாப்பு தேவையில்லை.
- கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 5 வருடம் ஆகும்.
- ஒரு தொழில்முனைவோருக்கு அதிகபட்ச திட்டச் செலவு :-
- ரூ. 15,00,000/- உற்பத்திக்காக.
- ரூ. 5,00,000/- வணிகம்/ வர்த்தகம்.
- ரூ. 5,00,000/- சேவை.
பயனாளி தகுதி நெறி முறைகள்
- விண்ணப்பதாரர் தமிழ்நாட்டின் நிரந்தர குடியிருப்பாளராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5,00,000/-.க்கு குறைவாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் வயது கீழே குறிப்பிட்ட வயது இருக்க வேண்டும் :-
- பொது விண்ணப்பதாரருக்கு 18 வயது முதல் 35 வயது வரை.
- கீழே குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு வகை விண்ணப்பதாரருக்கு 18 வயது முதல் 45 வயது வரை :-
- பெண்கள்.
- சிறுபான்மையினர்.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.
- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.
- பட்டியில் வகுப்பினர்.
- பழங்குடி வகுப்பினர்.
- முன்னாள் ராணுவத்தினர்.
- திருநங்கைகள்.
- மாற்றுத்திறனாளி.
- விண்ணப்பதாரரின் திட்ட செலவு பங்களிப்பு இருக்க வேண்டும் :-
- பொது விண்ணப்பதாரருக்கான மொத்த திட்டச் செலவில் 10%.
- சிறப்பு வகை விண்ணப்பதாரருக்கான மொத்த திட்டச் செலவில் 5%.
தேவையான ஆவணங்கள்
- தமிழ்நாடு வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயன் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் தேவை :-
- தமிழ்நாட்டின் இருப்பிடச் சான்று.
- குடும்ப அட்டை.
- 8ஆம் வகுப்பு கல்வி தொடர்பான ஆவணங்கள்.
- நேட்டிவிட்டி சான்றிதழ். (குடும்ப அட்டை இல்லை என்றால்).
- ஆதார் அட்டை.
- வாக்காளர் அடையாள அட்டை.
- புகைப்படம்.
- திட்ட அறிக்கை மற்றும் மேற்கோள்.
- சாதிச் சான்றிதழ். (பொருந்தினால்)
- முன்னாள் படைவீரர் அட்டை. (பொருந்தினால்)
- ஊனமுற்றோர் சான்றிதழ். (பொருந்தினால்)
- வாக்குமூலம்.
விண்ணப்பிக்கும் முறை
- தகுதியான தொழில்முனைவோர், தமிழ்நாடு வேலையில்லா இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து மூலதன மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- தமிழ்நாடு வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் இணையத்தளத்தில் கிடைக்கும்.
- விண்ணப்பதாரர் பெயர், பிறந்த தேதி, ஆதார் அட்டை, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல் போன்ற அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து முதலில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
- பதிவுசெய்த பிறகு, மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடவுச்சொல் மூலம் உள்நுழையவும்.
- வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை படிபடியாக நிரப்பவும் :-
- சொந்த விவரங்கள்.
- தொடர்பு விபரங்கள்.
- கல்வி தொடர்பான விவரங்கள்.
- திட்ட விவரங்கள்.
- வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
- விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்கள் மாவட்ட தொழில் மையத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்.
- நேர்காணலுக்குப் பிறகு, மூலதன மானியத்திற்கான விண்ணப்பங்கள் கடனுக்காக வங்கிக்கு அனுப்பப்படும்.
- பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டப் பயிற்சி நடத்தப்படும்.
- தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் பயிற்சியில் கலந்துகொள்வது கட்டாயமாகும்.
- விண்ணப்பதாரர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டப் பயிற்சிச் சான்றிதழை வங்கியில் சமர்ப்பித்தவுடன் மட்டுமே வங்கியால் கடன் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களின் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் பர்ர்க்கலாம்.
திட்டத்தின் விண்ணப்ப ஓட்டம்

முக்கியமான இணையதள இணைப்புகள்
- தமிழ்நாடு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம்.
- தமிழ்நாடு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டப் பதிவு.
- தமிழ்நாடு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் உள்நுழைவு.
- தமிழ்நாடு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட விண்ணப்ப நிலை.
- தமிழ்நாடு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட வழிகாட்டுதல்கள்.
தொடர்பு விபரங்கள்
Do you have any question regarding schemes, submit it in scheme forum and get answers:
Feel free to click on the link and join the discussion!
This forum is a great place to:
- Ask questions: If you have any questions or need clarification on any aspect of the topic.
- Share your insights: Contribute your own knowledge and experiences.
- Connect with others: Engage with the community and learn from others.
I encourage you to actively participate in the forum and make the most of this valuable resource.
Caste | Person Type | Scheme Type | Govt |
---|---|---|---|
Matching schemes for sector: Fund Support
Sno | CM | Scheme | Govt |
---|---|---|---|
1 | ![]() |
Tamil Nadu Naan Mudhalvan UPSC Mains Scholarship Programme | தமிழ்நாடு |
Matching schemes for sector: Business
Sno | CM | Scheme | Govt |
---|---|---|---|
1 | ![]() |
தமிழ்நாடு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் | தமிழ்நாடு |
Matching schemes for sector: Fund Support
Sno | CM | Scheme | Govt |
---|---|---|---|
1 | ![]() |
Pradhan Mantri Awas Yojana(PMAY) – Housing for All | CENTRAL GOVT |
2 | ![]() |
Yudh Samman Yojana | CENTRAL GOVT |
3 | ![]() |
Nikshay Poshan Yojana | CENTRAL GOVT |
Matching schemes for sector: Business
Sno | CM | Scheme | Govt |
---|---|---|---|
1 | ![]() |
Credit Guarantee Scheme for Startups | CENTRAL GOVT |
2 | ![]() |
Prime Minister's Employment Generation Programme | CENTRAL GOVT |
Stay Updated
×
Comments
எனக்கு தொழில்முனைவோர் கடன்…
எனக்கு தொழில்முனைவோர் கடன் வேண்டும்
I want to apply
I want to apply
solar power plant
solar power plant
repayment minimum time period
repayment minimum time period
புதிய கருத்தை சேர்