Highlights
- பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள்/ திருநங்கைகள் இவர்களுக்கு பின்வரும் சலுகைகள் வழங்கப்படும் :-
- தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்.
- 30 கிலோமீட்டர் வரை எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
திட்டம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை |
|
---|---|
திட்டத்தின் பெயர் | பெண்களுக்கான தமிழ்நாடு இலவசப் பேருந்து பயணத் திட்டம். |
துவங்கிய தேதி | 2021 |
பயன்கள் | தமிழக அரசு இயக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம். |
பயனாளிகள் | தமிழக பெண்கள். |
குறைத் தீர்க்கும் பிரிவு | சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை, தமிழ்நாடு அரசு. |
சந்தா | பெண்களுக்கான தமிழ்நாடு இலவசப் பேருந்து பயணத் திட்டம் பற்றிய உடனடி தகவலுக்கு இணையுங்கள் |
விண்ணப்பிக்கும் முறை | பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயண திட்டத்திற்கு எங்கும் விண்ணப்பிக்க தேவையில்லை. |
திட்ட அறிமுகம்
- தமிழக அரசு தமிழக மக்களின் நலனுக்காக பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
- தமிழக பெண்களுக்கான சமூக நலத் திட்டங்களில் ஒன்று விலையில்லா பேருந்துப் பயணத் திட்டம்.
- இது 2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
- இலவசப் பேருந்து பயணத் திட்டத்தைத் தொடங்குவதன் முக்கிய நோக்கம், உயர் வேலைப் பங்கேற்பிற்காக தமிழகப் பெண்களை ஊக்குவிப்பதும், தனியார் போக்குவரத்தை சார்ந்திருப்பதைக் குறைப்பதும் ஆகும்.
- பெரும்பாலான வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கான வசதி குறைவாக இருக்கிறது.
- பேருந்தில் கட்டணம் செலுத்தி பயணப்பதால் பெண்களுக்கு நிதி ரீதியாக, அதிக சுமைகளை ஏற்படுத்துகிறது.
- எனவே, தமிழகப் பெண்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில், அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய தமிழக அரசு, இத்திட்டத்தை துவங்கியுள்ளது.
- தமிழ்நாடு இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு இயக்கப்படும் பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்தால் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
- பயணத்தின் போது பயனாளிகளுக்கு விலையில்லா கட்டண டிக்கெட் வழங்கப்படும்.
- அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் 30 கிலோமீட்டர் வரை மட்டுமே செல்லுபடியாகும்.
- பயனாளிகள் சரிபார்ப்பு நோக்கத்திற்காக புகைப்படம் உள்ள அடையாள அட்டை ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
- தமிழ்நாட்டின் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் திருநங்கைகளும் இலவசமாகப் பயணம் செய்யத் தகுதியுடையவர்கள்.
- தமிழ்நாடு அரசு இயக்கப்படும் சாதாரண/ மாநகரப் பேருந்துகள் அல்லது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டுமே கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்படும்.
- பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்தில் பயன்ப் பெற எங்கும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
- தமிழக அரசின் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
திட்டத்தின் பயன்கள்
- பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள்/ திருநங்கைகள் இவர்களுக்கு பின்வரும் சலுகைகள் வழங்கப்படும் :-
- தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்.
- 30 கிலோமீட்டர் வரை எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
பயனாளிகள் தகுதி நெறி முறைகள்
- பெண்கள் தமிழ்நாட்டின் நிரந்தர குடியிருப்பாளராக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
- பெண்களுக்கான தமிழ்நாடு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் பலனைப் பெற, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பெண் பயனாளிகள் பேருந்து நடத்துனரிடம் பயணத்தின் போது காண்பிக்க வேண்டும் :-
- ஆதார் அட்டை.
- வாக்காளர் அடையாள அட்டை.
- பள்ளி அடையாள அட்டை.
- கல்லூரி அடையாள அட்டை.
- பணியாளர் அடையாள அட்டை.
- அல்லது புகைப்படம் உள்ள வேறு ஏதேனும் அடையாள அட்டை.
விண்ணப்பிக்கும் முறை
- பெண்களுக்கான தமிழ்நாடு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்திற்கு எங்கும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
- தமிழ்நாட்டின் பெண் பயனாளிகள் தமிழ்நாடு அரசு இயக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்யலாம்.
- ஆனால் இந்த திட்டத்தில் கிலோமீட்டர் வரம்பு உள்ளது.
- தமிழ்கத்தில் 30 கிலோமீட்டர் தூரம் வரையிலான அரசுப் பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய முடியும்.
- பயணத்தின் போது சரிபார்ப்பு நோக்கங்களுக்காக புகைப்படம் உள்ள அடையாள அட்டை தேவை.
- பயனாளிகள் நேரடியாக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்து இலவசப் பயணத்தின் பயனைப் பெறலாம்.
முக்கிய இணைய தள இணைப்பு முகவரிகள்
பயனாளிகள் இணைய சேவை மையம்
Scheme Forum
Subscribe to Our Scheme
×
Stay updated with the latest information about பெண்களுக்கான தமிழ்நாடு இலவசப் பேருந்து பயணத் திட்டம்
Comments
Bus pass
I am worked in trichy i need bus pass
Please issue bus passes I am…
Please issue bus passes I am student
Pass for college erode
Pass for college erode
Any pass facility
Any pass facility
is aadhar card enough
is aadhar card enough
புதிய கருத்தை சேர்